தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்ட் தாக்குதல்

ஊட்டி: கேரளா, கர்நாடகா மாநிலங்கள் சந்திக்கும் எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளாவின் வயநாடு மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. எல்லையோர பகுதிகளில் உள்ள பழங்குடியின கிராமங்களுக்கு அவ்வப்போது வந்து செல்லக்கூடிய அவர்கள் அரசுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டி செல்வார்கள். வயநாட்ைட ஒட்டி நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளதால், இங்கு மாவோயிஸ்ட்கள் நுழைந்துவிடாதபடி கிராம பகுதிகள், வனப்பகுதிகளில் தமிழ்நாடு அதிரடிபடையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த மாத இறுதியில் எல்லை பகுதியில் நுழைந்த மாவோயிஸ்ட்கள் சிலர் அங்குள்ள அரசு அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.

பின்னர் கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் பொருட்களை சூறையாடினர். அலுவலக சுவற்றில் கம்பமலை தோட்டம் பழங்குடிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ெசாந்தமானது என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் கூடிய போஸ்டரை தமிழ் மற்றும் மலையாளத்தில் ஓட்டிச்சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கேரள மாநிலம் வயநாடு அருகே கம்பமலை எஸ்டேட் பகுதியில் துப்பாக்கிகளுடன் நுழைந்த 5 மாவோயிஸ்ட்கள் அங்கு குடியிருப்பு பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பான தகவலின் பேரில் கேரள போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

*தமிழக பகுதியில் நடமாட்டம் இல்லை – எஸ்பி
நீலகிரி மாவட்ட எஸ்பி பிரபாகர் கூறுகையில், ‘நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இல்லை. தற்போது கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் உள்ள எஸ்டேட் பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். சோலாடி, மணல்வயல் உட்பட ேகரள எல்லையோரங்களில் உள்ள 11 சோதனைச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நக்சல் தடுப்பு பிரிவினர் வனப்பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்பகுதிகளில் யாரேனும் புதிதாக காயத்துடன் நடமாடுவது தெரிய வந்ததால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related posts

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு