மணிப்பூரில் 4வது முறையாக ராணுவ அதிகாரி கடத்தல்

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் ராணுவ அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் தவ்பால் மாவட்டத்தில் உள்ள சாரங்பத் மாமாங் லெய்கி பகுதியை சேர்ந்தவர் கோன்சம் கேடா சிங். ராணுவ அதிகாரியான இவர் விடுப்பில் இருந்தார். இந்நிலையில் நேற்று காலை இவரது வீட்டிற்குள் நுழைந்த கும்பல் அவரை கட்டி வாகனத்தில் கடத்தி சென்றதாக கூறப்படுகின்றது. கடத்தலுக்கான உண்மையான காரணம் தெரியவில்லை. எனினும் கடந்த காலங்களிலும் குடும்பத்தினருக்கு இதுபோன்ற மிரட்டல் அச்சுறுத்தல்கள் இருந்துள்ளது. இது மிரட்டி பணம் பறிப்பதற்காக நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட ராணுவ அதிகாரியை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் கலவரம் நடக்கத்தொடங்கியதில் இருந்து ராணுவ அதிகாரி கடத்தப்படுவது இது 4வது சம்பவமாகும்.

Related posts

அரசு பள்ளிகளில் 6890 ஹைடெக் லேப் நிர்வாகிகள் நியமனம்; பணிகளை வரையறை செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் ஒன்றிணைந்து செயல்பட சசிகலா அழைப்பு

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்வரலாற்று வெற்றிக்காக முழு பலத்துடன் களம் இறங்கிய திமுக: தோல்வி பயத்தில் ஒதுங்கியதா அதிமுக? பாஜவுக்கு பலமில்லாததால் பாமக போட்டி