மங்களூரியன் சிக்கன் நெய் ரோஸ்ட்

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வெல்லம் – 1 டீஸ்பூன்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப

நெய் ரோஸ்ட் மசாலாவிற்கு…

வரமிளகாய் – 6
மிளகு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 2
வெந்தயம் – 1 டீஸ்பூன்
மல்லி – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 4
புளி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை எடுத்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், வெந்தயம், சீரகம், மல்லி, கிராம்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு மணம் வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பூண்டு மற்றும் புளி பேஸ்ட் சேர்த்து 1 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள நெய் ரோஸ்ட் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, நெய் தனியே பிரிந்து மேலே மிதக்கும் வரை வேக வைக்க வேண்டும். இறுதியாக அதில் வெல்லம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, இறக்கினால், சுவையான மங்களூரியன் சிக்கன் நெய் ரோஸ்ட் தயார்.

 

Related posts

சைனீஸ் காளான் சூப்

சாக்லெட் கப்ஸ்

துவரம் பருப்பு இட்லி உப்புமா