17 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தவர் கைது

மாதவரம்: சென்னை, புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வில்வேந்தன் (63). இவர் கடந்த 2007ம் ஆண்டு குடிபோதையில் ஒரு இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சில நாட்கள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்த அவர், அதன்பிறகு இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தான் இருந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்.

பலமுறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்து ஆஜராகவில்லை. இதனையடுத்து வில்வேந்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி எழும்பூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பல வருடங்களாக தேடியும் வில்வேந்தனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று புளியந்தோப்பு போலீசார் வில்வேந்தனை சூளை பகுதியில் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறும்: கார்கே திட்ட வட்டம்

சென்னை கொரட்டூரில் வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுவன் பலத்த காயம்

இடைக்கால ஜாமினை நீட்டிக்கக் கோரி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனு