விளம்பரம் செய்துவிட்டு சின்னத்திரை நடிகர்களை ஏமாற்றியவர் கைது

சென்னை: வடபழனியை சேர்ந்தவர் விஜயகுமார். தனியார் நிறுவனங்களை விளம்பரப்படுத்தும் நிறுவனம் நடத்துகிறார். இவரிடம் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ரித்தன்யா என்பவர் தனது நிறுவனத்தை சின்னத்திரை நடிகர், நடிகைகளை வைத்து பிரமோஷன் செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதற்கு 2.35 லட்சம் கட்டணமாக விஜயகுமார் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, காரைக்குடியில் கடந்த நவம்பர் 8ம்தேதி சின்னத்திரை பிரபலங்களை வைத்து நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்துள்ளார்.

இதற்கு முன்பணமாக விஜயகுமார் ஒரு லட்ச ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. வேலை முடிந்ததும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கொடுத்து விடுவதாக ரித்தன்யா கூறியுள்ளார். ஆனால் சொன்னபடி பணத்தை கொடுக்காமல் மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட விஜயகுமார் மாம்பலம் காவல் நிலையத்தில் ரித்தன்யா மீது கடந்த மாதம் புகார் அளித்தார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கு சம்பந்தமாக சென்றபோது தியாகராய நகர் போலீசார் தகவலின் பேரில் ரித்தன்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்