450 க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் மாமுக்கோயா காலமானார்

திருவனந்தபுரம்: 450 க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் மாமுக்கோயா (76 வயது) காலமானார். மலையாள சினிமாவில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் மாமு கோயா. நாடக நடிகராக இருந்து கடந்த 1979ல் அன்யருடே பூமி என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட், நாடோடிக்காற்று, பெருமழக்காலம், வடக்கு நோக்கி எந்திரம், பட்டனப்பிரவேசம், மழவில்காவடி உள்பட 450க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மலப்புரம் மாவட்டம் காளிகாவு என்ற இடத்தில் ஒரு கால்பந்து போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்றார். அப்போது திடீரென மாமு கோயாவுக்கு மயக்கம் ஏற்பட்டது. கீழே சாய்ந்தார். உடனே அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

டாக்டர்கள் பரிசோதித்தபோது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக அவரை கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிரபல நடிகர் மாமுக்கோயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related posts

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு