மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா நடந்த பகுதியில் ஒருவர் கொலை..!!

மதுரை: மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா நடந்த பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்; ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக், சிவகங்கை திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த சோனைக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தியதில் சோனை உயிரிழந்தார். கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை, முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

Related posts

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து