மதுரையில் ஜெய்கா கடன் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் கட்டப்படும்: மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

டெல்லி: மதுரையில் ஜெய்கா கடன் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் கட்டப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டப்படும் என்று திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் நிர்மலா சீதாராமன் பேசியபோது, வெட்கம் வெட்கம் என்று திமுக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர்.

மதுரை எய்ம்ஸ் குறித்து நிர்மலா சீதாராமன் தவறான தகவல்களை தருவதாக திமுக எம்.பிக்கள் புகார் தெரிவித்தனர். திமுக எம்.பி.க்கள் முழக்கத்தை அடுத்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை கொடுக்க வேண்டாம். தற்போது ராமநாதபுரத்தில் தற்காலிகமாக எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படுவதாகவும் அதில் 99 மாணவர்கள் படித்து வருவதாகவும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட நிதி அதிகரிப்பால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை இல்லை; கூடுதல் கடனும் இல்லை.

மதுரையில் ஜெய்கா கடன் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் கட்டப்படும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் மாநில அரசால் தாமதமாக மேற்கொள்ளப்பட்டதால் கட்டுமானம் தாமதமாகிறது என்று குறிப்பிட்டார். எய்ம்ஸ் கட்டப்படும் என்று நிர்மலா சீதாராமன் பேசியபோது, எப்போது எப்போது என்று திமுக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். பிற மருத்துவமனைகளை விட தமிழகத்தில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பிற எய்ம்ஸில் 750 படுக்கைகள் உள்ள நிலையில் மதுரையில் கூடுதலாக 150 படுக்கை வசதி தரப்பட உள்ளது என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார். மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சை புறக்கணித்து திமுக கூட்டணிக் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

Related posts

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

உ.பி. மாநிலம் தேர்தல்; பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!