மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோனி பாப்புசாமி பற்றி அவதூறு செய்தி வெளியிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோனி பாப்புசாமி பற்றி அவதூறு செய்தி வெளியிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவதூறு செய்தி வெளியிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒருவரைப் பற்றி செய்தி வெளியிடும் முன் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். வேடசந்தூரைச் சேர்ந்த மரியசெல்வி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். தனது உறவினரான பேராயர் அந்தோனி பாப்புசாமி பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டுள்ளதாக மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார்.

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்

சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 11 குழுக்கள் அமைப்பு!!

கோவை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்