மாட்ரிட் ஓபன் டென்னிஸ் முதல் முறையாக ஸ்வியாடெக் சாம்பியன்


மாட்ரிட்: ஸ்பெயினில் நடந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். பரபரப்பான இறுதிப் போட்டியில் 2வது ரேங்க் வீராங்கனை அரினா சபலென்காவுடன் (பெலாரஸ், 26 வயது) மோதிய ஸ்வியாடெக் (22 வயது) 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த சபலென்கா 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீராங்கனைகளும் விடாப்பிடியாக தங்கள் சர்வீஸ் ஆட்டத்தில் புள்ளிகளைக் குவித்து முன்னேற, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது.

3 மணி, 11 நிமிடத்துக்கு நடந்த இப்போட்டியில் ஸ்வியாடெக் 7-5, 4-6, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் போராடி வென்று முதல் முறையாக மாட்ரிட் ஓபனில் பட்டம் வென்று சாதனை படைத்தார். சபலென்கா 3 முறை சாம்பியன்ஷிப் பாயின்ட் வரை சென்றும், அதை இகா முறியடித்து கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. நடப்பு சீசனில் 3வது சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஸ்வியாடெக், மொத்தம் 20 பட்டங்களை வசப்படுத்தி உள்ளார்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு