4 ஆண்டுக்குமுன் தாயை கொன்ற சித்த மருத்துவர் சிக்கினார்

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே நடுத்திட்டு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜானகி(70). அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனியாக வசித்து வந்தார். இவரது முதல் மகனான அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் பாரிராஜன் (51) சிறிது தூரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2020ல் ஜானகி கொலை செய்யப்பட்டு 8 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து அவரது 2வது மகன் ராஜா தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

நாகப்பட்டினம் சிபிசிஐடி போலீசார் கடந்த 2023ல் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஜானகியின் மகன் பாரிராஜன்தான தாயை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாரிராஜனை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.இதையடுத்து பாரிராஜனை நாகப்பட்டினம் முதன்மை குற்றவியல் நீதிபதி நீதிமன்றத்தில் சிபிசிஐடி பிரிவு போலீசார் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

Related posts

ஜூன் 3: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக இருங்க… முகவர்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு