மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் பிரசாரம் இன்று தொடக்கம்

நாக்பூர்: காங்கிரஸ் கட்சியின் 139வது நிறுவன நாளையொட்டி மகாராஷ்டிராவில் பொது தேர்தல் பிரசாரத்துக்கான மெகா பேரணி இன்று நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு பொது தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. காங்கிரஸ் கட்சியும் மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்குகின்றது. கட்சியின் 139வது நிறுவன நாளான இன்று மக்களவை தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்குகின்றது. இதற்காக ‘நாங்கள் தயார்’ என்ற பேரணிக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்எஸ்எஸ் தலைமையகம் மற்றும் டாக்டர் அம்பேர்கர் பவுத்த மதத்தை தழுவிய வரலாற்று சிறப்பு மிக்க தீக்‌ஷபூமி அமைந்துள்ள நாக்பூரில், நாங்கள் தயார்( ஹைன்தயார் ஹம்) மெகா பேரணி நடைபெறுவதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது