அதிரப்போகும் நாடாளுமன்றம்!: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பகல் 12 மணிக்கு பேசுகிறார் ராகுல் காந்தி..!!

டெல்லி: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பகல் 12 மணிக்கு பேசுகிறார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. இதையடுத்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. இதன் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று தொடங்கியது. காங்கிரஸ் சார்பில் அசாம் எம்.பி. கவுரவ் கோகோய் விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது பிரதமர் இதுவரை மணிப்பூர் செல்லாதது ஏன்? எனவும் மணிப்பூர் முதல்வரை பதவிநீக்கம் செய்யாதது ஏன்? என்பன உட்பட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். பின்னர் திமுக, விசிக கட்சி எம்.பி.க்களும் விவாதத்தில் பங்கேற்று பேசினர். இதனிடையே, மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் இன்று 2ம் நாளாக விவாதம் நடக்க உள்ளது.

மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று மக்களவையில் ராகுல் பேசுவாரா என எதிர்பார்ப்பு எழுந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பகல் 12 மணிக்கு பேசுகிறார். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி இன்று விவாதத்தை தொடங்கி வைக்கிறார் என்று ஆதீர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்