மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் ; 10,92,420 வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிப்பு!!

டெல்லி : மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்களின் வயது வாரியான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது.

தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணிகள் அமைக்கப்பட்டு தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள். இதன்மூலம் மும்முனை போட்டி உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் விவரங்கள் வயது வாரியாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 18 முதல் 19 வயதுக்குள் உள்ள 10,92,420 வாக்காளர்கள் முதல்முறையாக தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். முதல்முறை வாக்காளர்களில் ஆண்கள் – 5,85,153; பெண்கள் 5,07,113, மூன்றாம் பாலினத்தவர்கள் 154 ஆவர். மேலும் வாக்காளர்களின் விவரங்கள் வயது வாரியாக பின்வருமாறு…

Related posts

தொடரும் வெறிநாய்கள் செயல்; வெறிநாய் கடித்ததில் 3 குழந்தைகள் படுகாயம்; கரூரில் நாய்களிடம் கடிபட்டு உயிரிழந்த புள்ளி மான்!

தமிழ்நாட்டில் நெல்லை, தேனி உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

பயணிகளின் சிரமத்தைக் குறைக்க நடவடிக்கை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்