லோக்சபா தேர்தல் வருவதால் அடுத்த 3 மாதங்களுக்கு வானொலி உரை இருக்காது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: லோக்சபா தேர்தல் வருவதால் அடுத்த 3 மாதங்களுக்கு எனது வானொலி உரை இருக்காது என்று பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி இன்று தனது 110வது மாதாந்திர ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில், ‘வரும் 8ம் தேதி பெண்கள் மரியாதை தினம் கொண்டாடப்படும். பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைத்தால் தான் நாடு முன்னேறும். கிராமங்களில் வசிக்கும் பெண்களும் இன்று ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு விவசாயம் செய்கின்றனர். பெண்கள் பின்தங்கிய பகுதி என்று எந்தப் பகுதியும் இன்று இல்லை. இயற்கை விவசாயம், நீர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் பெண்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் கிடைக்கும் போது மட்டுமே, உலகம் தன்னிறைவு பெரும் என்று மகாகவி பாரதியார் கூறியுள்ளார். மார்ச் 3ம் தேதி ‘உலக வனவிலங்கு தினம்’ என்பதால், வன விலங்குகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த ஆண்டு, உலக வனவிலங்கு தினத்தின் கருப்பொருளாக டிஜிட்டல் கண்டுபிடிப்பு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, ஒன்றிய அரசின் முயற்சியால், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவின் சந்திரபுர் புலிகள் சரணாலயத்தில் புலிகளின் எண்ணிக்கை 250-க்கும் மேல் அதிகரித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகும். அதனால் அடுத்த மூன்று மாதங்களுக்கு எனது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இருக்காது’ என்றார்.

Related posts

சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மூலம் மிரட்டல்

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

அருணாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 10 வெற்றி உள்பட மொத்தம் 31 இடங்களில் முன்னிலை