பரப்புரைக்கு அரசு ஹெலிகாப்டரை பயன்படுத்துவது விதிமீறல்: பிரதமர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என எம்.பி.சாகேட் கேள்வி

டெல்லி: ஆந்திராவுக்கு தேர்தல் பரப்புரைக்கு செல்வதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரில் பயணித்து பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் நடத்தி விதிமீறல்களை மீறி விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் நடந்த தேர்தல் பரப்புரை குடத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக அவர் விமான படை ஹெலிகாப்டரை பயன்படுத்தினார். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சாகேட் புகார் அளித்துள்ளார்.

அதில் பரப்புரைக்காக செல்லும் போது அரசு ஹெலிகாப்டர், விமானத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறையைகளை மீறி இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான தமது எக்ஸ் பக்க பதிவில் இதே காரணத்திற்காக தான் 1975ம் ஆண்டு இந்திரா காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விமானத்தை பாஜக வாடகை எடுத்திருந்தால் மற்ற தலைவர்கள் அனைவரும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த விவிஐபி ஹெலிகாப்டரை பயன்படுத்தும் போது பிரதமர் மற்றும் விமான படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்துவதற்கான தேவை என்ன என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார் மேலும் தேர்தல் தேதியை அறிவித்த போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டுள்ள சாகேட் தற்போது பிரதமர் மீது விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கிறதா என்பதை பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு!