ரூ.2 ஆயிரம் கோடி மதுபான ஊழல் சட்டீஸ்கர் ஓய்வு ஐஏஎஸ் அதிகாரி கைது

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் ரூ.2 ஆயிரம் கோடி மதுபான ஊழலில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சட்டீஸ்கரில் ரூ.2ஆயிரம் கோடிக்கு மதுபான ஊழல் நடந்ததுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில்,மாநிலத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அனில் டுடேஜா, அவரது மகன் யஷ் டுடேஜா ஆகியோரிடம் நேற்றுமுன்தினம் அமலாக்கத்துறை பல மணி நேரம் விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்தது.

பின்னர் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அனில் டுடேஜாவை அமலாக்கத்துறை காவலில் எடுத்தது. விசாரணைக்கு பின் யஷ் டுடேஜாவை அமலாக்கத்துறை விடுவித்தது. சட்டீஸ்கர் தொழில் மற்றும் வர்த்தக துறை இணை செயலாளராக பதவி வகித்துள்ள அனில் டுடேஜா கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கனவே பதிவு செய்த எப்ஐஆரை உச்சநீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.இதையடுத்து பொருளாதார குற்ற பிரிவு வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. பொருளாதார குற்ற பிரிவு புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளது.

Related posts

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் உதவி தொகையாக ரூ.2 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சாலையில் நடந்து சென்றபோது இளம்பெண்ணை ஆக்ரோஷமாக முட்டி 50 மீட்டர் தூரம் இழுத்து சென்ற மாடு: மேலும் பலர் காயம்

சென்னையின் முதல் குரல் புத்தகம் வெளியீடு எதிர்மறை சிந்தனை வரும்போது ஆறுதல் தருவது புத்தகம்தான்: நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை