மதுபான கொள்கை முறையீடு விவகாரம்: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!

டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணை முதல் மணீஷ் சிசோடியா தற்போது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே இவர் ஜாமின் கோரி கடந்த மார்ச் 31ம் தேதி தொடர்ந்த மனுவை விசாரித்த டெல்லி கீழமை நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தனர்.

இதற்கு எதிராக சிபிஐ பதிவு செய்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா மனுத்தாக்கல் செய்திருந்தார். அதுமட்டுமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மனைவியின் உடல்நலத்தை தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தார்.

பிறகு அதனை திரும்ப பெற்றிருந்தார். இந்நிலையில், மணீஷ் சிசோடியா அதிகாரமிக்கவராக இருப்பதால் சாட்சியங்களைக் கலைக்கக் கூடும் என்பதால் ஜாமீன் வழங்க முடியாது என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தொடர்ந்து, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் சிசோடியாவின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related posts

தீப்பெட்டி ஆலையில் கழிவுக் குச்சிகளை அகற்றும்போது தீ விபத்து!

டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மோதலை கட்டுப்படுத்த போலீஸ் துப்பாக்கிச்சூடு: ஓய்.எஸ்.ஆர். காங். கட்சியினர் தப்பி ஓட்டம்!