லடாக்கில் நடந்த சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது; குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்

டெல்லி: லேயில் நடந்த சாலை விபத்து இந்திய ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சோகத்தை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகத்திற்கு தேசம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது என்று குடியரசு தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தெற்கு லடாக்கின் நியோமா அருகே உள்ள கெரே பகுதியில் சென்றபோது, ஒரு வாகனம் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள ஆழமான பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த வாகனத்தில் 10 வீரர்கள் இருந்தனர். பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் வாகனம் அப்பளம் போல நொறுங்கியது. அதில் இருந்த வீரர்கள் அனைவரும் வாகன இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றன.

காயம் அடைந்த வீரர்களை மீட்டு ராணுவ ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 9 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.உயிரிழந்த வீரர்களின் விவரம் உடனடியாக தெரியவில்லை. அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. வாகன விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

 

Related posts

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: கார்கே

மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்..!!

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்