குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு எல்.முருகன் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி: அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் பெண்சக்தியாக திகழும் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முக்கு எனது அன்பு கலந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தாங்கள் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தேசத்தின் நலப்பணிகளை தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Related posts

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு: சம்பவ இடத்திற்கு விரைகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை