குலசேகரம் அருகே பழங்குடியின பெண் விஷம் குடித்து சாவு மருத்துவமனையை முற்றுகையிட்ட மக்கள்

*ஆர்டிஓ விசாரணை

குலசேகரம் : குலசேகரம் அருகே உள்ள மணலோடை, புறாவிளை பகுதி மலைவாழ் பழங்குடியின மக்கள் வாழும் மலை கிராமம் ஆகும். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுகுமாரன். கூலி தொழிலாளி. இவருக்கு ஜெயா (36) என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் ஜெனிஷா (20) பிளஸ் 2 வரை படித்துள்ளார். கடந்த 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே பகுதியை சேர்ந்த ஜெனிஷ் (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவரும் அந்தப் பகுதியில் தனி வீட்டில் வசித்து வந்தனர். ஜெனிஷ் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார். வீட்டில் சும்மா இருக்க பிடிக்காததால் ஜெனிஷா கடந்த 4 மாதங்களாக திருநந்திக்கரை பகுதியில் தையல் பயிற்சிக்கு சென்று வந்தார்.

தினமும் காலை 10 மணிக்கு தையல் பயிற்சிக்கு செல்பவர் மாலை 5 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம்இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அவரது தாய் ஜெயாவுக்கு, மகள் வீட்டின் அருகில் உள்ளவர்கள், ஜெனிஷா விஷம் குடித்து குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக ஜெயா குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது மருத்துவர்கள், ஜெனிஷா வாயில் நுரை தள்ளிய நிலையில் கொண்டு வர பட்டதாகவும், அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் ஜெனிஷா சாவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பழங்குடியின மக்கள் மற்றும் பொது மக்கள் குலசேகரம் காவல் நிலையம் மற்றும் குலசேகரம் அரசு மருத்துவமனை முன் திரண்டனர். அவர்களிடம் போலீசார் முறையாக ஆர்டிஒ விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து நேற்று பத்மநாபபுரம் ஆர்டிஓ தமிழரசி ஜெனிஷாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து குலசேகரம் மருத்துவமனையில் இருந்து ஜெனிஷா உடலை பிரேத பரிசோதனை செய்ய ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

இரு சமூகத்தினர் இடையே மோதல்: பாலசோரில் 144 தடை உத்தரவு

பலத்த காற்றுடன் மழை: இருட்டில் சிதம்பரம் ரயில் நிலையம்

உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை நாளை முதல் 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூடல்