பாஜக நிர்வாகிகளை விரட்டியடித்த குளச்சல் மீனவர்கள்

பாஜக நிர்வாகிகளை விரட்டியடித்த குளச்சல் மீனவர்கள்: தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்த குளச்சல் மீனவர்களை மீட்டதற்கு உரிமை கொண்டாடிய பாஜகவினர் விரட்டியடிக்கப்பட்டனர். குளச்சல் மீனவர்கள் 85 பேர், 5 விசைப்படகுகளை கடந்த 20-ம் தேதி தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்தனர். அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை சிறைபிடித்தனர். மீனவர்கள் குளச்சல் துறைமுகம் வந்தபோது தங்கள் முயற்சியால் விடுவிக்கப்பட்டதாக பாஜக நிர்வாகிகள் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீனவர்களை வரவேற்க குளச்சல் துறைமுகம் வந்த பாஜக மீனவரணி நிர்வாகி சீமா உள்ளிட்டோரை சக மீனவர்கள் விரட்டியடித்தனர். மீனவர்கள் மற்றும் பா.ஜ.க.வினர் இடையே நிகழ்ந்த வாக்குவாதத்தால் குளச்சல் துறைமுகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவி வருகிறது.

Related posts

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்