பூத்து குலுங்கும் பூங்கா: கொடைக்கானல் 60-வது மலர்க் கண்காட்சி இன்று தொடக்கம்..வியக்க வைக்கும் டிரோன் காட்சிகள்..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 60-வது மலர்க் கண்காட்சி இன்று துவங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. பூத்து குலுங்கும் பூங்காவின் டிரோன் காட்சிகள் பார்வையாளர்களை வியக்க வைக்கின்றன. கொடைக்கானலில் ஏற்கனவே நடவு செய்யப்பட்டுள்ள செடிகளில் பல லட்சம் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. சால்வியா, டெல்ஃபினியம், மேரிகோல்ட், ரோஜா செடிகள் உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்ளன. கண்காட்சியையொட்டி அமைக்கப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட அரங்குகளில் 35வகையான மலர்கள், காய்கறி மற்றும் பழங்கள் இடம்பெற்றுள்ளன.

மலர்களால் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ள ஒட்டகச்சிவிங்கி, கரடி, வாத்து உள்ளிட்டவையும் காய்கறிகளால் அமைக்கப்பட்ட காட்டெருமை, வரிக்குதிரை உள்ளிட்ட உருவங்கள் இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாகும். இந்நிலையில் பூத்து குலுங்கும் பூங்காவின் டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, வெளிமாவட்டங்களில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

Related posts

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம்

சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் விஐபி நுழைவாயிலில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியது: விமானநிலைய அதிகாரிகள் ஆய்வு

மோடி இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சி செய்தால் நாடே அழிந்துவிடும்: மல்லிகார்ஜூன கார்கே காட்டம்