கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு!: சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்..வியாபாரிகள் வேதனை..!!

நீலகிரி: இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலில் இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இ-பாஸ் நடைமுறை வந்தால் மீண்டும் கொரோனா காலத்துக்கு செல்லக்கூடிய நிலை ஏற்படும் என வேதனை தெரிவிக்கின்றனர். இ-பாஸ் நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கொடைக்கானல் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கொடைக்கானலுக்கு வர ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் இ-பாஸ் முறையால் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் முறையால் வருவாய் இழப்பு ஏற்படும் – வியாபாரிகள் வேதனை

கோடைகாலத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கொடைக்கானல் வருகின்றனர். கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பி உள்ளூர்வாசிகள் பலர் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்றுவழி சாலைகளை அறிமுகப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

குமரியை சேர்ந்த தமிழக பாஜ மாநில நிர்வாகி 1200 கோடி சுருட்டினாரா?.. பரபரப்பாகும் ஆடியோ வைரல்

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு