சிகரெட் பிடிப்பதை வீட்டில் சொல்வேன் என மிரட்டி பைக்கில் கடத்தி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு: மாநகராட்சி ஊழியர் போக்சோவில் கைது

சென்னை: சிகிரெட் பிடிப்பதை வீட்டில் சொல்லி விடுவேன் என மிரட்டி பைக்கில் கடத்தி சென்று பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மாநகராட்சி ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சென்னை மாநகராட்சி பத்தாவது மண்டலத்தில் கொசு மருந்து அடிக்கும் ஊழியராக இருப்பவர் செல்வமணி (35). அசோக் நகரை சேர்ந்த பள்ளி மாணவன் அருகில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற சிறுவனை வழிமறித்த செல்வமணி, சிகரெட் பிடிப்பதை வீட்டுக்கு சொல்லி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

பின்னர் சிறுவனை இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவரிடம் இருந்து தப்பித்து ஓடிய மாணவன், வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை கூறினான்.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அசோக் நகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செல்வமணியை கைது செய்தனர். அவன் மீது கடத்தல், போக்சா சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

5ம் கட்ட மக்களவை தேர்தலில் 3 மணி நிலவரப்படி 47.53% வாக்குப்பதிவு

கஞ்சா வைத்திருந்த வழக்கில் யூடியூபர் சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்: மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து சகோதரரின் ஜாமின் ரத்து