பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5 மசோதாக்களுக்கு கேரள கவர்னர் ஒப்புதல்


திருவனந்தபுரம்: கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர் காலம் தாழ்த்தி வந்தார். இதைத்தொடர்ந்து கவர்னருக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஒரு சில மசோதாக்களில் மட்டும் கையெழுத்து போட்ட கவர்னர் ஆரிப் முகம்மது கான், சில மசோதாக்களை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.

இது தவிர நிலப்பதிவு சட்டத் திருத்த மசோதா, கூட்டுறவு சட்டத் திருத்த மசோதா உள்பட 5 மசோதாக்களில் கையெழுத்து போடாமல் அவர் கிடப்பில் வைத்திருந்தார். இதனால் கவர்னரை எதிர்த்து இடதுசாரி கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த 5 மசோதாக்களுக்கும் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நேற்று ஒப்புதல் அளித்தார்.

Related posts

மே-10: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

லாரி முன் பாய்ந்து சுகாதார ஆய்வாளர் தற்கொலை

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல்