கேரளாவில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக கோடை வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் இன்று முதல் 4 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களிலும், 3ம் தேதி பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களிலும், 4ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 64.5 மிமீ முதல் 115.5 மிமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்கப்படும்: மக்கள் நல்வாழ்வுத்துறை

கனகம்மாசத்திரம் சாலையில் வேரோடு பெயர்ந்து விழுந்த நூறாண்டு புளியமரம்: உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்

திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த 750 பக்தர்களுக்கு மஞ்சப்பை