2வது வழக்கிலும் ஈடி விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால்

புதுடெல்லி: இரண்டாவது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கிலும் அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்துள்ளார். டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீசை வாங்காமல் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தவிர்த்து வந்தார்.

இது சட்டவிரோதமானது என்றும் கூறினார். இதனை தொடர்ந்து அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.  இந்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் அனுப்பப்பட்ட 9 வது நோட்டீசில் வருகிற 21ம் தேதி (நாளை மறுநாள்) விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் 2வது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோரி டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் இந்த வழக்கிலும் அவர் நேற்று விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்துவிட்டார்.

Related posts

முதல்வரின் தனிப் பிரிவில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனைவி மனு

சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ்

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி