புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு: மேள, தாளம் முழங்க பக்தர்கள் பரவசம்..!!

நாட்டில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மிக முக்கியமான வழிபாட்டு தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, எமனோத்ரி ஆகியன உத்திராகண்ட் மாநிலத்தில் தான் அமைந்துள்ளன. சிவனுக்குரிய தலமாக கேதர்நாத் செல்ல ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். கடும் பனிப்பொழிவு, கனமழை காரணமாக கேதர்நாத் யாத்திரைக்கு அனுமதி தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வானிலை சீரடைந்ததால் திட்டமிட்டபடி கேதார்நாத் யாத்திரை பாதை திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் மேளம் அடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். உத்திராக்கண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் சாமி தரிசனம் செய்தார். கேதர்நாத் சிவன் தளம் 3,583மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வெண்பனிக்கு மத்தியில் மலைப்பாதையை கடந்து சென்று பக்தர்கள் வழிபாடு வருகின்றனர்.

Related posts

தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…

மக்களவை தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு: ஆர்வமுடன் ஜனநாயக கடமையாற்றிய மக்கள்

சீனாவில் பிரம்மாண்ட கார் கண்காட்சியில் அணிவகுத்து நிற்கும் எலெக்ட்ரிக் கார்கள்..!!