கர்நாடக பாஜ எம்பி மரணம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தொகுதி பாஜ எம்பியாக இருப்பவர் வி.சீனிவாச பிரசாத்(76). கடந்த 1999ல் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உணவு வழங்கல் மற்றும் பொது வினியோகதுறை அமைச்சராக இருந்தார். இந்த முறை தேர்தலில் போட்டியிட பாஜ சார்பில் சீட் தரப்படாததால் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தார். சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசபிரசாத், நேற்று காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் சித்தராமையா உள்பட பலர் நேரில் மலரஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திரமோடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related posts

சிறார் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமம் ரத்து என்ற விதிமுறை தமிழகத்தில் அமல் ஆவதில் தாமதம்

வட மாநிலங்களில் வாட்டிவரும் வெப்ப அலை: உ.பி.யில் 25 தேர்தல் பணியாளர்கள் பலி

வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்