கர்நாடக மக்களின் நலனை காக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்: துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேட்டி

டெல்லி: கர்நாடக மக்களின் நலனை காக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய காவிரி நீரை 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி வீதம் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் உள்ள தகவல்கள் தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் குழுவுடன், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது; அனைத்து சட்ட வல்லுநர்களுடனும் ஆலோசனை நடத்தினோம். தினமும் 5,000 கன அடி காவிரி விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கர்நாடகத்திற்கு மிகப்பெரிய வலி. ஏனெனில் கர்நாடகத்தில் மழை இல்லை. கர்நாடக மக்களின் நலனை காக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். கர்நாடக விவசாயிகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பார்கள் என்று நம்புகிறேன். நாங்களும் தமிழ்நாட்டு விவசாயிகளை மதிக்கிறோம். எங்களிடம் நீர் இல்லாத சூழலில் தமிழ்நாடு கேட்கும் நீரை திறக்க இயலாது. இவ்வாறு கூறினார்.

Related posts

விஷவாயு தாக்குதல்: புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு விடுமுறை

கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயிலில் வைகாசி ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

2024 மக்களவை தேர்தலில் பதிவானதைவிட கூடுதல் வாக்குகள் எண்ணப்பட்டது ஏன்?.. தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமா?