கர்நாடகாவில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு: காங்கிரஸ் நிர்வாகிகள் மாட்டு கோமியம் தெளித்து பூஜை..!!

கர்நாடகா: கர்நாடகாவில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பதற்காக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியுள்ள நிலையில் சட்டப்பேரவை வளாகம் முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள் மாட்டு கோமியம் தெளித்து பூஜை செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைத்த பிறகு இன்று முதன்முறையாக சட்டமன்ற கூட்ட தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தொடரில் தேர்தெடுக்கப்பட்டுள்ள 224 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி பிரமாணம் செய்ய இருக்கின்றனர். இந்த சட்டமன்ற கூட்ட தொடர் கூடுவதற்கு முன்பாக சட்டமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் கோமியம் தெளித்து சட்டமன்ற வளாகத்தில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். ஒரு புறம் இந்த செயலை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.

சந்தர்ப்பவாத அரசியலாக பாஜகவை விமர்சித்துவிட்டு காங்கிரஸ் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக விமர்சனம் செய்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் தெளிவான விளக்கம் அளித்தனர் அரசின் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி அல்ல, காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் சட்டமன்ற வளாகத்தில் பூஜை செய்துவருவது தொண்டர்களுடைய நிலைப்பாடு மட்டுமே என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

Related posts

லாரி முன் பாய்ந்து சுகாதார ஆய்வாளர் தற்கொலை

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல்

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் நூதன மோசடி; ஆசிரியர் மீது வழக்கு பதிவு: ரூ7 லட்சம், செல்போன் பறிமுதல்