கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு இணையாக மதசார்பற்ற ஜனதாதளம் தீவிர பிரச்சாரம்

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக தலைவர்கள் முகாமிட்டு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு போட்டியாக மதசார்பற்ற ஜனதாதள வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதலமைசர் குமாரசாமி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

10-ம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ், பாஜகவின் வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தேசியத்தலைவர் கர்நாடக மாநிலம் முழுவதும் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 5 நாட்களில் இந்த பிரச்சாரம் ஓய்வு பெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு அடுத்தபடியாக இருக்க கூடிய மதசார்பற்ற ஜனதாதள கட்சியை பொறுத்த வரையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, மற்றும் அந்த கட்சியின் தலைவர் குமாரசாமி ஒரு தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

கர்நாடகாவை பொறுத்த வரையில் அரசியலை நிர்ணயிக்க கூடிய ஒரு சக்தியாக ஜேடிஏஸ் விளங்கிவருகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இணையான ஒரு பிரச்சாரத்தை முன்னாள் பிரதமர் தேவகவுடா, மற்றும் குமாரசாமி ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர். இந்த தேர்தலை பொறுத்தவரையில் மும்முனை போட்டி நிலவுகிறது. அதில் மற்ற 2 தேசிய கட்சிகளுக்கு இணையாக ஜேடிஏஸ் கட்சி வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.

விவசாயிகளை திருமணம் செய்துகொள்ள கூடிய இளம் பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். கல்வி கடன் ரத்து செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை ஜேடிஏஸ் கட்சியினர் அளித்துள்ளனர். தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இணையாக வாக்கு வாங்கி இல்லாவிட்டாலும் ஒரு தொங்கு சட்டமன்றம் அமைய பெற்றால் வெற்றியை தீர்மானிக்க கூடிய சக்தியாக ஜேடிஏஸ் திகழும்

Related posts

கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து சாலையோரம் உள்ள கிணற்றில் மோதி விபத்து

கும்பகோணத்தில் இரு சக்கர வாகனத்தை ஒட்டிச் சென்ற 16 வயதுடைய 2 சிறுவர்கள் உயிரிழப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் நடந்த காவல்துறை சோதனை நிறைவு