சட்டவிரோத பணப்பரிமாற்றம் ? காரைக்குடியில் அமலாக்கத்துறையினர் சோதனை

காரைக்குடி செஞ்சை வைத்தியலிங்கபுரம் திருவள்ளுவர் நகர் சாகுல் ஹமீது மற்றும் அவரது மாமனார் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சாகுல் ஹமீது சிங்கப்பூரில் இருந்த போது தடை செய்ய்ய்யப்பட்ட இயக்கத்திற்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது இதனால் சிங்கப்பூரில் இருந்த அவரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டு இந்தியா அனுப்பப்பட்டார். இந்தியா வந்த பிறகு தேசிய பாதுகாப்பு முகமை அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று சாகுல் ஹமீது வீடு மற்றும் காரைக்குடி செஞ்சை சண்முகநாதன் தெருவில் உள்ள அவரது மாமனார் முகமது அலி ஜின்னா(70) வீட்டிலும் அமலாக்கத்துறையினர் 8 பேர் இரு குழுக்களாக பிரிந்து சோதனை செய்து வருகின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை இருவரின் இல்லத்திலும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்புடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

Related posts

ஆட்டோவில் இருந்து குதித்து கைதி தப்பி ஓட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு