விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்துள்ள நன்மையில் 10% கூட ஒன்றிய அரசு செய்யவில்லை : கமல்ஹாசன் சாடல்

சென்னை : விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்துள்ள நன்மையில் 10% கூட ஒன்றிய அரசு செய்யவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அக்கட்சி தலைவர் கமல்,”என் சொந்த காசை வைத்து கட்சி நடத்துகிறேன்.முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை; முழு நேர அப்பனும் இல்லை; பிள்ளையும் இல்லை. 30ஆயிரம் பேர் ஓட்டு போடாததால் நான் கோவையில் தோற்றேன். முழு நேர குடிமகனாக இல்லாமல் ஓட்டு கூட போடாதவர்கள் என்னை முழுநேர அரசியல்வாதியா எனக் கேட்காதீர்கள். தேசத்தின் குடியுரிமையே ஆட்டம் கண்டுள்ளது. விவசாயிகளை தடுக்க ஆணி படுக்கையை சாலையில் போட்டுள்ளது ஒன்றிய அரசு,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்..!!

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு