கள்ளழகர் திருவிழா: மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: கள்ளழகர் கோயில் திருவிழாவின்போது நீரை பீச்சி அடிக்க கட்டுப்பாடுகளை விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே கள்ளழகர் மீது நீரை பீய்ச்சி அடிக்க வேண்டும் என்ற ஆட்சியர் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய நடைமுறை பாதிப்பதோடு, பக்தர்கள் மனதை புண்படுத்தும் என கருதுவதால் ஆட்சியர் உத்தரவுக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

Related posts

ஐதராபாத்தை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு

பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி