காளஹஸ்தியில் சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவை தரிசித்த ஏராளமான பக்தர்கள்..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் கண்ணப்பர் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. தென் கயிலாயம் என்றும் பஞ்ச பூத தளங்களில் காற்றுக்குரியதாகவும் அழைக்கப்படுவது ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில். இங்கு நேற்று தொடங்கிய மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 16ம் தேதி வரை 13 நாட்களுக்கு விமர்சியாக நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு நேற்று மாலை கண்ணப்பர் மலையில் உள்ள கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

பின்னர் 4 மாட வீதிகளில் வந்த பஞ்ச மூர்த்திகள், திருவீதியுலாவில் ஏராளமானவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், ஈரோடு அருகே ராட்டைசுற்றி பாளையத்தில் உள்ள பைரவர் கோயிலில், 39 அடி உயர பைரவர் சிலையுடன் தென்னக காசி பைரவர் ஆலயம் என அழைக்கப்படுகிறது. இங்கு தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆண், பெண் பக்தர்கள் நேரடியாக கருவறைக்குள் சென்று மூலவர் சொர்ணலிங்க பைரவருக்கு பாலபிஷேகம் செய்தனர். பின்னர் கோயில் முன்பாக வெண்பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.

Related posts

ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை காலை கலைஞர் நூற்றாண்டு நிறைவு

பூக்கடை பகுதியில் பரபரப்பு மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதியை பார்த்தபடி நிர்வாணமாக நின்று சைகை காட்டிய வாலிபர் கைது

தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு