ஜார்க்கண்ட் எம்எல்ஏ ராஜினாமா

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் ஆளும் ஜெ.எம்.எம் கட்சி எம்எல்ஏ சர்பரஸ் அகமது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜெ.எம்.எம்) கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் கந்தே தொகுதி ஜெ.எம்.எம் எம்எல்ஏவான சர்பரஸ் அகமது தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட சட்டப்பேரவை சபாநாயகர், கந்தே தொகுதி காலியானதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

இறுக்கமான முகத்தோடு சொந்த ஊர் வந்து சேர்ந்த இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

அசாமில் மழையால் 3.5லட்சம் பேர் பாதிப்பு