நகை கடையில் இருந்து 50 சவரனை அபேஸ் செய்தவர் சிக்கினார்: போலீசார் நடவடிக்கை

பெரம்பூர்: கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 6வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் முகமது அசன் நலீம் (47). இவர் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் தங்க நகை கடை நடத்தி வருகிறார். இவரது குடும்ப நண்பரின் மகனான கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 92வது பிளாக் பகுதியை சேர்ந்த முகமது அக்ரமுல்லா (38), அடிக்கடி முகமது அசன் நலீமின் கடையில் தங்க நகைகளை வாங்கி, அதனை விற்று தருவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 50 சவரன் தங்க நகைகளை அசன் நலீமிடம் இருந்து அக்ரமுல்லா வாங்கியுள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் அதற்கான பணத்தை அசன் நலீமுக்குத் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுகுறித்து முகமது அசன் நலீம், கொடுங்கையூர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை, என கூறப்படுகிறது. இதனால், முகமது அசன் நலீம் நீதிமன்றத்தை அணுகி அக்ரமுல்லா மீது நடவடிக்கை எடுக்க மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து அக்ரமுல்லா மீது உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் கொடுங்கையூர் போலீசாருக்கு அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் நேற்று கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அக்ரமுல்லாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை

மெக்கா: வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் பலி