நாவலூர் அருகே ஐடி ஊழியர் வீட்டில் நகை, லேப்டாப் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

திருப்போரூர்: நாவலூர் அருகே ஐடி ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகைகள், 2 லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாவலூர் அருகே தாழம்பூர் அடுத்துள்ள காரணை கிராமத்தில் தனியார் வீட்டு மனை குடியிருப்பு உள்ளது. இதில், சீனிவாசன் (48) என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். சீனிவாசன் சிறுசேரி தகவல் தொழில் நுட்ப பூங்காவில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 4 தினங்களுக்கு முன்பு விடுமுறை என்பதால் குடும்பத்துடன் குற்றாலத்திற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 7 சவரன் நகைகள், 2 லேப்டாப் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த சீனிவாசன், இதுகுறித்து தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கூட்டுறவு வங்கியில் ரூ.5 லட்சம் வரை கல்விக்கடன் : அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

அங்கன்வாடி ஊழியர் வீட்டில் 15 சவரன் நகைக் கொள்ளை..!!

ஆந்திராவில் இன்று NDA எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!!