ஜவ்வாதுமலை அருகே 1200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

*வனத்துறையினர் அதிரடி

போளூர் : ஜவ்வாதுமலை அருகே 1200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை வனத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து அழித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வனச்சரக அலுவலர் க.முருகன் அறிவுரையின்படி செங்கவரம் பிரிவு வனச்சரக அலுவலர் த.அரிஷ் தலைமையில் மூலக்காடு தெற்கு பீட் வனக்காப்பாளர் கி.விஜயகுமார், மூலக்காடு கிழக்கு பீட் வனக்காப்பாளர் ஜெ.முனிவேல், கர்நாடகிரி வனக்காப்பாளர் ச.ராஜசேகர் ஆகியோர் கொண்ட சிறப்பு குழு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மூலக்காடு தெற்கு பீட் பால்வாரி வழிசரகத்திற்கு பட்டரைக்காடு காப்புகாடு சீங்கிணறு வழிசரகத்தில் கள்ளச்சாரயம் ஊறல் 6 பேரல்களிலும். 50 லிட்டர் சாராயம் பாறை இடுக்கில் வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அதனை கைப்பற்றி அழிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருந்த பால்வாரி கிராமத்தை சேர்ந்த குமரேசன் மகன் வெங்கடேசன்(27) என்பவரை கைது செய்து, போளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Related posts

ஆழியாறு அணையில் இருந்து இன்று முதல் அக்.10 வரை தண்ணீர் திறந்து விடப்படுகிறது

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்

மக்களவை சபாநாயகர் பதவிக்கு பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி.. !!