ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கின் உதவியாளர் உள்பட 9 இடங்களில் சிபிஐ மீண்டும் சோதனை..!!

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கின் உதவியாளர் உள்பட அவருக்கு நெருக்கமானவர் இடத்தில் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது முறையாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆளுநராக இருந்த போது மருத்துவ காப்பீடு திட்டம் ஒன்றிற்கு ஒப்புதல் கொடுக்க ரூ.300 கோடி லஞ்சம் கொடுக்க சிலர் முயற்சி செய்ததாக 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சத்யபால் மாலிக் குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2 வழக்குகள் சிபிஐ சத்யபால் மாலிக்கின் ஊடக பிரிவு உதவியாளர் சுனக் பாலி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. தற்போது இதே வழக்கு தொடர்பாக சுனக் பாலி மற்றும் வேறு சிலர் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டுள்ளது. புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததற்கு ஒன்றிய அரசின் அலட்சியமே காரணம் என்று சத்யபால் மாலிக் அண்மையில் குற்றச்சாட்டு கூறியதால் பாஜக ஆட்சியாளர்களுக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

ராகுலை பிரதமர் ஆக்க கோரிக்கை வைப்போம்: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை கொஞ்ச நாட்கள் யாரும் பார்க்க முடியாது: விராட் கோலி பேட்டி

நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு