IRCTC இணையதளம் மூலம் வங்கி கணக்கு விவரங்களை பெற்று ரூ.1.8 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

சென்னை: இந்திய ரயில்வேயின் அதிகார பூர்வ இணையதளமான IRCTC இணையதளம் வாயிலாக ஆன்லைன் மோசடி ந்டைபெற்றது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வடபழனியை சேர்ந்த ஸ்ரீதரன் (51) என்பவர் நாகர்கோயில் செல்லவிருந்த தனது பயணத்தை ரயில்வே வின் அதிகார பூர்வ இணைய தளத்தில் ரத்து செய்துள்ளார். பின் இணையதளத்தில் உதவிக்கு என பதிவிட்டிருந்த 9832603458 என்ற எண்ணை அழைத்து தனது டிக்கெட்டை ரத்து செய்துவிட்டதாகவும், தனது பணத்தை மீண்டும் அனுப்புமாறும் ஸ்ரீதரன் கூறியுள்ளார். எதிர் முனையில் பேசிய நபர் வங்கி விபரங்கள் மற்றும் ஏடிஎம் கார்ட் விபரங்களை கேட்டுள்ளார்.

இந்திய அரசின் அதிகார பூர்வ இணைய பக்கம் என்பதால் ஸ்ரீதரன் வங்கி தகவல்களை கூறியதை அடுத்து சில நிமிடங்களில் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.1.8 லட்சம் எடுக்கபட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீதரன் உடனடியாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் IRCTC இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த மொபைல் எண் ரயில்வே நிர்வாகத்தால் பதிவிடப்படவில்லை என தெரியவந்தது.

இதனை அடுத்து ரயில்வே இணையதளமான IRCTC இணையதளம் ஹேக் செய்யபட்டுள்ளதா என்பதை கண்டறிய சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்