ஞானவாபி மசூதி வளாகத்துக்குள் தடயவியல் சோதனைக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கம் அல்லது நீரூற்று போன்ற வடிவத்தை அறிவியல் பூர்வமான தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதித்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்து கடவுள்களின் உருவங்கள் இருப்பதாகவும், அவற்றிற்கு பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில் மசூதிக்குள் லிங்கம் அல்லது நீரூற்று போன்று கண்டுபிடிக்கப்பட்ட பொருளின் வயதை கண்டறியும் வகையில் தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் தடயவியல் சோதனைக்கு அனுமதி வழங்கியது.

இதையடுத்து மேற்கண்ட அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக தாக்கல் செய்யப்பட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து பிறப்பித்த உத்தரவில், ‘‘இதுபோன்ற விவகாரங்களை மிகவும் கவனமாக அணுக வேண்டும். சம்பந்தப்பட்ட சிலை போன்ற அமைப்பு சேதம் எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எனவே இந்த விவகாரத்தில் வேறு ஏதேனும் வாய்ப்புகள் இருக்கிறதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசுகள் பதில் அளிக்க வேண்டும்’’ என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது. இந்த வழக்கில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரையில் தடயவியல் பரிசோதனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Related posts

நாகர்கோவில் அருகே இன்று அதிகாலை வேனுடன் எரிந்து சாம்பலான இசைக் கருவிகள்: போலீசார் தீவிர விசாரணை

பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

திரவுபதி அம்மன் கோயில் கொடியேற்று விழா நடத்த 2வது முறையாக அதிகாரிகள் தடை: மரக்காணத்தில் போலீஸ் குவிப்பு-பதற்றம்