ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுப்பு

டெல்லி: ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது. சீனாவின் செயலுக்கு இந்திய கடும் எதிர்ப்பு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரின் சீன பயணம் ரத்து செய்துள்ளார்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தை சீனா தொடர்ந்து சட்டவிரோதமாக சொந்தம் கொண்டாடி வருவது நாம் அனைவர்க்கும் அறிந்தது. அவர்கள் அனைத்து வகையிலும் இந்த விஷியத்தை தீவிர படுத்துகின்றனர். அந்த வகையில் தற்போது சீனாவின் ஹொங்கோவில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்துக்கொள்ளும் வீரர்கள், அருணாச்சல பிரதேசத்தில் சேர்ந்த வீரர்களை அனுமதிக்காமல் இருந்திருக்கிறார்கள், அவர்களை நாட்டுக்குள் விடாமல் இருந்திருக்கிறார்கள்.

இதற்கு கடுமையான கண்டனங்களை அறிவித்திருக்கக்கூடிய இந்திய அரசு சீனா இந்த நடவடிக்கை மூலம் அதிகமான பரபச்சத்தை காட்டி இருக்கிறார்கள், என்பதை பதிவு செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய குடிமக்களை வேறுபட்ட முறையில் நடத்துவதை இந்திய உறுதியாக நிராகரிக்கிறது என்றும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறது என்று இந்திய அரசு சார்பாக வெளியுலவு துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறார்கள்.

Related posts

ரூ.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட 12 வயது சிறுமியுடன் 72 வயது முதியவருக்கு திருமணம்: தடுத்து நிறுத்திய பாகிஸ்தான் போலீஸ்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு: 150 பசுக்கள் மீட்பு; ம.பி போலீஸ் நடவடிக்கை