இந்திய செஞ்சிலுவை சங்க நிர்வாக குழு பிப்ரவரி வரை நீடிக்க அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளையை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட தற்காலிக குழு பிப்ரவரி வரை நீடிக்க அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்காலிக குழு தொடர்ந்து செயல்பட உத்தரவிடக் கோரி சங்கத்தின் உப கிளை செயலாளர் செந்தில்குமார் வழக்கு தொடர்ந்தார். சங்கத்தின் தமிழ்நாடு கிளையில் நிர்வாக குளறுபடி, முறைகேடு உள்ளிட்ட புகார் தொடர்பாக ஏற்கனவே சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது. சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சங்க நிர்வாகத்தை தற்காலிக குழு நிர்வகிக்கிறது. சங்கத்தை நிர்வகிக்கும் தற்காலிக குழு நீடிக்க இடைக்கால அனுமதி அளித்து வழக்கை பிப்.8-க்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.

 

Related posts

திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: கடந்த 5 மாதத்தில் 33 பேர் பலி

தடைக்காலம் 2 வாரத்தில் நிறைவு; ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல ரெடி: மீன் பிடி உபகரணங்களை தயார் செய்யும் பணி தீவிரம்

அரக்கோணம் அருகே விடிய விடிய பரபரப்பு; மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?.. வனத்துறையினர் ஆய்வு