இந்திய விண்வெளி கழகத்தில் அப்ரன்டிஸ் : டிப்ளமோ/பி.இ., படித்தவர்களுக்கு வாய்ப்பு

தெலங்கானா மாநிலம், ஹைதரபாத்தில் உள்ள இந்திய விண்வெளி மையத்தில் காலியாக உள்ள 70 இடங்களுக்கு ஒரு வருட அப்ரன்டிசுக்கு பி.இ., டிப்ளமோ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி விவரம்

1. Graduate Apprentice: 17 இடங்கள் (Electronics & Communication Engineering-5, Computer Science Engineering-5, Electrical and Electronics Engineering-3, Civil Engineering-1, Mechanical Engineering-1, Library Science-2). தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் பி.இ., பட்டம் பெற்றிருக்க வேண்டும். நூலக அறிவியல் பிரிவுக்கு ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்து முதல் வகுப்பு B.Lisc., பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவித் தொகை ₹9,000.

2. Technician Apprentice: 53 இடங்கள். (Electronics & Communication Engineering-10, Computer Science Engineering-10, Electrical and Electronics Engineering-6, Civil Engineering-2, Mechanical Engineering-2, Diploma in Commercial and Computer practice-23). தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் பிராக்டீஸ் மற்றும் கமர்ஷியல் பாடப் பிரிவுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இந்த பயிற்சிகளுக்கு 2021ம் ஆண்டுக்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். டிப்ளமோ/பி.இ., படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். www.mhrdnats.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பதாரர் தங்களைப் பற்றிய விவரங்களை முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Establishment Name List ஐ கிளிக் செய்து அதிலிருந்து இஸ்ரோ நிறுவனத்தை தேர்வு செய்து www.umang.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவரம் www.boat-srp.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.isro.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 02.06.2023

Related posts

திருப்பதி, திருமலையில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது..!!

உதகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!