உதகை அருகே எமரால்டில் 2 புலிகள் நேற்று உயிரிழந்ததற்கான காரணம்: வனத்துறை விளக்கம்

உதகை: உதகை அருகே எமரால்டில் 2 புலிகள் நேற்று உயிரிழந்ததற்கான காரணம், பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும், உயிரிழந்த 2 புலிகளின் உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை
என்று வனத்துறை விளக்கமளித்துள்ளனர். 3 வன கால்நடை மருத்துவர்கள், கால்நடை பராமரிப்புத் துறையின் 2 மருத்துவர்கள் மூலம் இன்று உடற்கூறாய்வு நடைபெற உள்ளது, புலிகளின் உடல்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு

குமரி முழுவதும் பரவலாக சாரல் மழை: மேலும் 6 வீடுகள் இடிந்து விழுந்தன

பாலக்காடு அருகே சில்லிக் கொம்பன் யானை முகாம்: தோட்ட தொழிலாளர்கள் அச்சம்