ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு; போக்குவரத்து துறை ஆணையராக சண்முகசுந்தரம் நியமனம்..!!

சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அமைச்சரவை சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முதல்வரின் செயலர், உள்துறை செயலர், நிதித் துறை செயலர், ஊரக வளர்ச்சித் துறை செயலர், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் உட்பட14 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று, 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,

* தமிழக போக்குவரத்துத் துறை ஆணையராக ஏ.சண்முகசுந்தரம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* போக்குவரத்து ஆணையராக இருந்த எல்.நிர்மல்ராஜ் தமிழ்நாடு புவியியல் மற்றும் சுங்கத்துறை இயக்குநராக நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

* சமூக நலத்துறை மற்றும் மகளிர் அதிகாரமளிப்புத் துறை ஆணையராக ஜெ.ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* மதுரை மாநகராட்சி ஆணையராக கே.ஜே.பிரவீன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

* சேலம் மாநகராட்சி ஆணையராக எஸ்.பாலசந்தர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை இயக்குநராக டி.ரத்னா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய செயல் இயக்குனராக சிம்ரஞ்சித் சிங் காலோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* தமிழ்நாட்டில் புதிதாக இயற்கை வளத்துறை எனும் துறை உருவாக்கப்பட்டு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இயற்கை வளத்துறையை போக்குவரத்துத்துறை கூடுதல் செயலாளராக உள்ள பணீந்திர ரெட்டி கவனிப்பார் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

Related posts

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

மே-19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை