வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் -பாகலூர் சாலையில் உள்ள கேசிசி நகர் பகுதியில் உள்ள தனியார் குடோனில் செல்வம் என்பவர் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை இருப்பு வைத்திருந்தார். இந்த கிடங்கிற்கு பின்புறம் பொது வெளியில் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பது வழக்கம். மேலும், பழைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தது. நேற்று பகல் நேரத்தில் கடும் வெயில் காரணமாக திடீரென எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பற்றி எரிந்தது. மேலும், அருகில் கிடந்த பழைய பிரிட்ஜ் ஒன்று வெடித்து சிதறி தீப்பிடித்துக் கொண்டதில், பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு கிடக்கிற்கும் தீ பரவியது. அப்போது, காற்று வேகமாக வீசியதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிகள், 3 டூவீலர்கள் முழுமையாக எரிந்து போனது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்